TNPSC Thervupettagam

லக்ஷயா திட்டம்

December 13 , 2017 2569 days 1217 0
  • உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு (Universal Health Coverage Day) மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மகப்பேற்று அறைக்கான தர மேம்பாட்டு திட்டமான (Labour Room Quality Improvement Initiative) லக்ஷயா (LaQshya) எனும் மருத்துவ பணியாளர்களுக்கான கைபேசி செயலியை வெளியிட்டுள்ளது.
  • தங்கள் மருத்துவமனையின் சுற்றுவட்டப்பகுதிகளில் இருந்து வரும் சாதாரண மற்றும் சிக்கலான பிரசவங்களை கையாளும் மருத்துவப் பணியாளர்களுக்கான கைபேசி செயலியே மகப்பேற்று அறைக்கான தர மேம்பாட்டு திட்டம் எனப்படும் LaQshya ஆகும்.
  • மகப்பேற்று அறையில் (Labour Room) வழங்கப்படும் சிகிச்சைகளின் (Care) தரத்தினை உயர்த்தி அவற்றின் மூலம் தடுக்கப்படக் கூடிய தாய்-சேய் இறப்புகளை குறைத்தலும், குழந்தைகள் நோயுற்ற தன்மையோடு பிறத்தல் (morbidity) மற்றும் இறந்து பிறத்தல் (Still Birth) போன்றவற்றை குறைத்தலும் இதன் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
  • இவை நாட்டின் அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும், மாவட்ட மருத்துவமனைகளிலும், மாவட்ட துணை மருத்துவமனைகளிலும், சமுதாய ஆரோக்கிய மையங்களிலும் செயல்படுத்தப்படும்.
  • மேலும் இத்திட்டத்தின் கீழ் மகப்பேற்று அறைகளுக்கு தரசான்றளிப்பும், இத்திட்டத்தின் இலக்குகளை அடையும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்