கிழக்கு லடாக் இமயமலையில் உள்ள பர்ட்சே என்ற இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 18,000 அடி உயரத்தில் பவளப்பாறை படிமங்கள் காணப்படுவதைப் புவியியலாளர் கண்டறிந்துள்ளனர்.
இங்கு கண்டறியப்பட்ட புதைபடிவங்கள் பவளப் பாறை குழுமங்களின் பல்வேறு கட்டமைப்புகளை உள்ளடக்கியது என்பதோடு இது பர்ட்சே பகுதியின் ஆரம்பகால கடல் வாழ் உலகினை உள்ளடக்கிய நிலவியல் பற்றிய ஒரு கண்ணோட்டத்தினை அளிக்கிறது.
இந்த கண்டுபிடிப்புகள் ஆனது இந்தப் பகுதியில் ஒரு காலத்தில் இருந்ததாகக் கூறப்பட்ட பல்லுயிர் பெருக்கத்தைக் குறிக்கிறது.
பவளப் பாறைகள் என்பது, கால்சியம் கார்பனேட் கட்டமைப்பினால் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட பவளப்பாறைகளின் குழுமங்களை உள்ளடக்கிய நீரடிச் சூழல் அமைப்பு ஆகும்.