TNPSC Thervupettagam

லட்கா பாஹு யோஜனா – மகாராஷ்டிரா

July 25 , 2024 38 days 124 0
  • மகாராஷ்டிரா மாநில அரசானது, பெண்களுக்காக 'மஜ்ஹி  லட்கி பஹின் யோஜனா' என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இளையோர்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சி மற்றும் உதவித் தொகை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய திட்டத்தையும் அதன் முதலமைச்சர் அறிமுகப் படுத்தி உள்ளார்.
  • தற்காலிகமாக 'லட்கா பாவ்' யோஜனா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பு என்பது, 'முக்கிய மந்திரி யுவ காரிய-பிரஷிக்ஷன் யோஜனா' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • இந்தத் திட்டம் ஆனது தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையுடன் கூடிய வேலைவாய்ப்புப் பயிற்சியினை அளிப்பதன் மூலம் வேலை வாய்ப்பின்மையை நிவர்த்தி செய்ய முயல்கிறது.
  • கல்வித் தகுதிகளின் அடிப்படையில் பின்வரும் அளவில் மாதாந்திர உதவித்தொகை வழங்குவது என்ற அமைப்புடன், 12 ஆம் வகுப்பு கல்வியை முடித்தவர்களை இந்த திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது:
    • 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.6,000,
    • பட்டயப் படிப்பு (டிப்ளமோ) பெற்றவர்களுக்கு ரூ.8,000, மற்றும்
    • இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.10,000.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்