கடல் வெப்ப அலைகள் காரணமாக லட்சத்தீவு கடலில் பெருமளவிலான பவளப்பாறை நிறமாற்ற நிகழ்வு பதிவாகியுள்ளது.
லட்சத்தீவுகள் கடல் பகுதியில் கணிசமான சதவீத அளவிலான கடினப் பவளப் பாறை இனங்கள் கடுமையான நிறமாற்ற நிகழ்விற்கு உட்பட்டுள்ளன.
இது முதன்மையாக 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து அந்தப் பிராந்தியத்தை நீடித்த காலமாகப் பாதித்து வரும் கடல் வெப்ப அலைகளின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.
தொடரும் வெப்ப அலைகள் ஆனது கடல் புல்வெளிகள் உட்பட மற்ற முக்கியமான கடல் வாழ்விடங்களையும் அச்சுறுத்துகின்றன.
பவளப்பாறைகளைப் போலவே, கடற்பரப்புப் புல்வெளிகளும் கடும் வெப்ப அலைகள் காரணமாக, ஒளிச்சேர்க்கை குறைதல், வளர்ச்சி குறைதல் மற்றும் தடைபட்ட இனப் பெருக்கச் செயல்பாடுகள் போன்ற பாதகமானத் தாக்கங்களை எதிர் கொள்கின்றன.