லண்டனின் இந்திய சங்கம் பல தசாப்த காலச் செயல்பாடுகளுக்குப் பிறகு செப்டம்பர் 17 ஆம் தேதியன்று நிரந்தரமாக மூடப்பட்டது.
ஐக்கியப் பேரரசில் சுதந்திரப் போராட்டத்தின் போது இந்தியர்களுக்கு இது ஒரு ஓய்வு இடமாக இருந்தது.
இது பிரிட்டிஷ் அமைப்பான இந்தியா லீக் மூலம் 1951 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பு ஆனது இந்திய சுதந்திரம் மற்றும் சுயராஜ்ஜியம் (சுவராஜ்) ஆகியவற்றிற்கான ஒரு ஆதரவு அமைப்பாகத் தொடங்கப்பட்டது என்பதோடு இது பிரிட்டிஷ் சமுதாயத்தில் உள்ள பல உயரடுக்குப் பிரிவு உறுப்பினர்களை உள்ளடக்கி இருந்தது.