TNPSC Thervupettagam

லப்பிஸ் லசுலி - ஆப்கானிஸ்தான்

March 30 , 2025 3 days 65 0
  • லப்பிஸ் லசுலி என்பது சில சமயங்களில் தங்க நிறக் கோடுகள் மற்றும் அரிய கல் மணிகள் / ஒரு இரத்தினக் கல்லாக பயன்படுத்தப்படும் ஒரு தெளிவான நீல நிறப் பாறையாகும்.
  • இதில் லசுரைட் (25-40%) எனப்படும் ஒரு அசாதாரண கனிமம் காணப்படுவதனால் இது இந்த நிறத்தைப் பெறுகிறது.
  • அதன் நீலநிறத் தன்மையானது, இந்த கனிமத்தில் உள்ள கந்தகத்தின் அளவு மற்றும் கட்டமைப்பைப் பொறுத்தது.
  • லாபிஸ் லசுலி ஆனது இதுவரையில் சிலி, ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • ஆனால் மிகவும் உயர்ந்த தரமான ஒரு பாறையானது ஆப்கானிஸ்தானின் படாக்சான் மாகாணத்திலிருந்து பெறப்படுகிறது என்பதோடு இங்கு அது 6,000 ஆண்டுகளுக்கும் மேலாக வெட்டி எடுக்கப்படுகின்றது.
  • இந்தப் பாறையானது இரண்டு மொழிகளில் இருந்து அதன் பெயரைப் பெறுகிறது: லப்பிஸ் என்பது 'கல்' எனப் பொருள்படும் இலத்தீன் மொழி சொல் ஆகும், அதே சமயம் 'லசுலி' என்பது 'நீலம்' என்று பொருள்படும் லாஷ்வர்டு எனும் பாரசீகத்தின் மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்