TNPSC Thervupettagam

லம்பானி கலையில் கின்னஸ் சாதனைப் படைப்பு

July 13 , 2023 355 days 204 0
  • கர்நாடகாவின் ஹம்பியில் உள்ள நாடோடி வாழ் லம்பானிச் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் அதிக எண்ணிக்கையில் பூத்தையல் போடப்பட்ட துணிகளைத் தயாரித்துப் புதிய கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்துள்ளனர்.
  • G20 கலாச்சாரப் பணிக் குழுவின் கூட்டத்தில், சுமார் 450 லம்பானிக் கைவினைஞர்கள் தங்களின் சிறப்பானத் திறன்களையும் கைவினைத் திறனையும் வெளிப்படுத்தினர்.
  • அவர்கள் 1,755க்கும் மேற்பட்ட தனித்துவமான துணிகள் கொண்ட ஒரு வியக்கத்தக்கத் தொகுப்பினை உருவாக்கியுள்ளனர்.
  • லம்பானிப் பூத்தையல் என்பது ஜவுளி அலங்காரத்தில் பல வண்ணமிகு நூலிழைகள், கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்ட மற்றும் பல்வேறு தையல் வடிவங்களின் கோர்வையான ஒரு வண்ணமிகு மற்றும் சிக்கலான ஒரு வடிவமாகும்.
  • கர்நாடகாவின் சந்தூர், கேரி தண்டா, மாரியம்மனஹள்ளி, கதிரம்பூர், சீதாராம் தண்டா, பிஜப்பூர் மற்றும் கமலாபூர் போன்ற பல்வேறு கிராமங்களில் இது தயாரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்