இந்தியக் கடற்படையானது, அமெரிக்கா மற்றும் பிரான்சு உட்பட எட்டு நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து ஒரு மாபெரும் போர்ப் பயிற்சியில் பங்கேற்று வருகிறது.
இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் இடையிலான நீர்ச்சந்தி, மலாக்கா, சுண்டா மற்றும் லோம்போக் நீர்ச்சந்தியில் இந்தக் கடற்படைப் பயிற்சியானது நடந்து வருகிறது.
இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளோடு சேர்ந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய சில நாடுகளின் கடற்படைகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றன.