TNPSC Thervupettagam

“லாகி ரான்சம்வேர்” (Locky Ransomware) பற்றி CERT-In எச்சரிக்கை

September 5 , 2017 2636 days 913 0
  • இந்திய கணினி அவசரகால மீட்பு நிறுவனம் (Indian Computer emergency Response Team - CERT - In) புதிதாக பரவிவரும் “லாகி” என்ற தீங்கிழைக்கும் மென்பொருள் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த லாகி மென்பொருளானது ‘ஸ்பாம்’ (Spam) என்ற தேவையற்ற மின்னஞ்சல் செய்திகளோடு சேர்த்து பரப்பப்பட்டு வருகின்றது. இது கணினிகளை தாக்கி தரமிட்டு அதனை வாடிக்கையாளர் மீட்டும்போது பணம்கேட்டு மிரட்டும்.
  • ரான்சம்வேர் என்பது அடிப்படையில் பணம் மிரட்டிக் கேட்டு பெறும்வரையில் கணினியின் உபயோகத்தைத் தடுக்கும் ஒரு தீங்கிழைக்கக் கூடிய மென்பொருளாகும்.
  • வான்னா கிரை (WannaCry) மற்றும் பெட்யா (petya) போன்ற தாக்குதல்களுக்கு அடுத்து லாகி (locky) இந்த வருடத்தின் மூன்றாவது பெரிய மென்பொருள் தாக்குதல் ஆகும். இவை அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் கணினிகள் உள்பட ஆயிரக்கணக்கான கணினிகளை முடமாக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்