TNPSC Thervupettagam
December 31 , 2019 1665 days 698 0
  • சீனா தனது மிகப்பெரிய செயற்கைக் கோள் தாங்கி விண்கலனான லாங் மார்ச் - 5ஐ வென்ச்சாங் விண்வெளி ஏவு மையத்திலிருந்து வெற்றிகரமாக ஏவியுள்ளது.
  • சீனாவின் மிக சக்திவாய்ந்த இந்த விண்கலனானது அந்நாட்டின் முதன்மையான விண்வெளித் திட்டத்தில் ஒரு முக்கியமான அங்கமாக விளங்குகின்றது.
  • இது ஷிஜியன் - 20 என்ற செயற்கைக் கோளை விண்ணுக்கு எடுத்துச் சென்றது.

லாங் மார்ச் - 5 பற்றி

  • இந்த விண்கலனானது சீனாவின் மிகவும் எடையுள்ள மற்றும் மிகவும் மேம்பட்ட தகவல் தொடர்புச் செயற்கைக்கோள் ஆகும்.
  • இந்த விண்கலனானது CZ - 5 என்றும் அழைக்கப் படுகின்றது.
  • இது அதிகபட்சமாக 25 டன் எடை கொண்ட செயற்கைக் கோளை புவியின் தாழ் சுற்றுவட்டப் பாதைக்கும் 14 டன் எடை கொண்ட செயற்கைக் கோளை புவிசார் ஒத்திசைவு சுற்றுப்பாதைக்கும் கொண்டு செல்லும் திறன் கொண்டது.
  • இந்த வெற்றிகரமான ஏவுதலானது 2020 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப இருக்கும் சீனாவின் திட்டமிட்ட பணிக்கான ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்