ரஷ்ய நாட்டிடமிருந்து எண்ணெயை வாங்கி, பின் அந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் விளைபொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்கு விற்கும் "லாண்ட்ரோமேட்" நாடுகள் (மலிவான கச்சா எண்ணெயை வாங்கி சுத்திகரித்து விற்பனை செய்யும் நாடுகள்) என பட்டியலிடப்பட்ட ஐந்து நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
"லாண்ட்ரோமேட்" என்று அழைக்கப்படும் நாடுகளின் பட்டியலில், இந்தியா தொடர்ந்து ஐந்தாவது மாதமாக ஏப்ரல் மாதத்தில், கடல்வழியே விற்பனை செய்யப் படுகின்ற ரஷ்ய கச்சா எண்ணெயினை அதிகளவில் பெறுகின்ற உலக நாடுகளின் ஒரு பட்டியலில், அவற்றின் அதிகபட்ச நுகர்வு நாடாக இந்தியா இருந்தது.
கூட்டணி நாடுகளுக்கு கச்சா எண்ணெய்ப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா மற்ற அனைத்து நாடுகளையும் விட முன்னணியில் உள்ளது.
இந்தியா ஏறக்குறைய 3.8 மில்லியன் டன் எண்ணெய்ப் பொருட்களை விலை வரம்பு நிர்ணயம் செய்யப் பட்ட கூட்டணி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இதில் ஐரோப்பிய ஒன்றியம், G-7 நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகியவை அடங்கும்.