TNPSC Thervupettagam

லாரஸ் உலக விளையாட்டு விருதுகள் 2025

April 25 , 2025 13 hrs 0 min 22 0
  • ஸ்பெயினில் வழங்கப்பட்ட 2025 ஆம் ஆண்டு லாரஸ் உலக விளையாட்டு விருதுகளில் சுவீடன் நாட்டினைச் சேர்ந்த கோலூன்றித் தாண்டும் விளையாட்டு வீரர் அர்மண்ட் டுப்லாண்டிஸ் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • 2025 ஆம் ஆண்டில் அமெரிக்காவினைச் சேர்ந்த ஜிம்னாஸ்ட் வீராங்கனை சைமன் பைல்ஸ் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.
  • ரியல் மாட்ரிட் அணியானது ஆண்டின் லாரஸ் சிறந்த அணிக்கான விருதைப் பெற்று உள்ளது.
  • ஆண்டின் லாரஸ் சிறந்த உலகத் திருப்புமுனை ஆட்டக்காரர் விருதை லாமின் யமல் பெற்றுள்ளார்.
  • ஆண்டின் லாரஸ் சிறந்த உலகத் திருப்புமுனை ஆட்டக்காரர் விருதை பிரேசில் நாட்டு ஜிம்னாஸ்ட் வீரர் ரெபேக்கா ஆண்ட்ரேட் வென்றுள்ளார்.
  • 'பறக்கும் மீன்' என்றும் அழைக்கப்படும் சீனாவின் ஜியாங் யுயான், இந்த ஆண்டின் சிறந்த மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • டாம் பிட்காக் இந்த ஆண்டிற்கான உலக அதிரடி விளையாட்டு வீரருக்கான விருதை வென்றுள்ளார்.
  • ரஃபேல் நடால் லாரஸ் சிறந்த விளையாட்டு வீரர் (ஐகான்) விருதைப் பெற்றுள்ளார்.
  • லாரஸ் பயன் விளைவிற்கான விளையாட்டு விருது ஆனது கிக்4லைஃப் என்ற ஒரு தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • சிறந்த அலைச்சறுக்கு வீரரான கெல்லி ஸ்லேட்டர், லாரஸ் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்