அரியானாவைச் சேர்ந்த இந்தியப் பெண் மல்யுத்த வீரரான வினீஷ் போகத் பெருமைமிகு லாரஸ் உலகின் மீண்டு வந்தவருக்கான இந்த ஆண்டு விருதுக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்திய தடகள வீரராக உருவெடுத்திருக்கின்றார்.
இவர் காயத்தின் காரணமாக ஏற்பட்ட நீண்ட இடைவெளியால் ஏற்பட்ட போராட்டத்திற்குப் பிறகு மீண்டு வந்து தனது திறமையினால் கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலும், ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்றமைக்காக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
இவரைத் தவிர அமெரிக்க சுற்றுப் பயண சாம்பியன்ஷிப் வெற்றியாளர் டைகர் வூட்ஸ், கனடாவின் பனிச்சறுக்கு விளையாட்டு வீரரான மார்க் மெக்மோரிஸ், அமெரிக்க ஊசியிலைக் காடுகளின் பனிச்சறுக்கு விளையாட்டு வீரரான லின்ட்சே வோன், ஜப்பானிய பனிச்சறுக்கு வீரரான யுசுரு மன்யு மற்றும் டச்சு நாட்டின் பனிச்சறுக்கு வீரரான பிபியன் மென்டெல் ஸ்பீ ஆகியோரும் இதே விருதுக்காக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.