TNPSC Thervupettagam
March 5 , 2018 2458 days 739 0
  • 2018 ஆம் ஆண்டிற்கான லாரியஸ் உலக விளையாட்டு வீரர் விருதை 20 முறை டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ரோஜர் பெடரர் வென்றுள்ளார்.
  • சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் இந்த விருதுகளை அதிகமுறைப்  பெற்றவராவர் (ஆறு விருதுகள்).

  • செரீனா வில்லியம்ஸ், 23-வது கிராண்ட்ஸ்லாம்-ஐ வென்ற பிறகு தான் உலக விளையாட்டு வீரருக்கான விருதை 2017-இல் பெற்றார்.
  • பார்முலா 1 கன்ஸ்ட்ரக்டார்ஸ் சாம்பியன் மெர்செடிஸ் இந்த ஆண்டுக்கான அணி பட்டத்தையும் (Team of the year accolade), சக்கர நாற்காலி தடகள வீரர்  மார்செல் ஹக் (Marcel Hug) இந்த ஆண்டின் மாற்றுத்திறனாளிகள் பிரிவிற்கான விளையாட்டு வீரர் பட்டத்தையும் வென்றுள்ளனர்.
  • இந்த ஆண்டிற்கான திருப்புமுனை விருது (Breaking through of the year) – செர்ஜியோ கார்சியோ (கோல்ஃப்).
  • லாரியஸ் கழக விதிவிலக்கு சாதனை விருது - பிரான்செஸ்கோ டோட்டி.
  • பிரேசில் கால்பந்தாட்ட சங்கம் சேப்காயின்ஸ் (Chapecoense) இந்த ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு கணத்திற்கான (Best Sporting moment of the year) விருதைப் பெற்றுள்ளது.
  • இந்த லாரியஸ் உலக விளையாட்டு விருதுகள், 1999-இல் நிறுவப்பட்டு விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்த தனிநபர் மற்றும் குழுக்களுக்கு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கிவருகிறது.
  • லாரியஸ் எனும் பெயர், லாரல் எனும் கிரேக்க வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டது. லாரல் என்பது தடகளத்தில் வெற்றியின் சின்னமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்