24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச் 5வது முறையாக லாரூஸ் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை வென்றுள்ளார்.
FIFA உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் நாட்டின் ஐடானா பொன்மட்டி, ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதை வென்ற முதல் கால்பந்து வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இங்கிலாந்தின் நட்சத்திரக் கால்பந்து வீரர் ஆன ஜூட் பெல்லிங்ஹாம், ரியல் மாட்ரிட் நகரில் தனது ஆரம்பகாலத் தாக்கத்திற்காக லாரூஸ் ஆண்டின் திருப்புமுனை விருதை வென்றுள்ளார்.
மிகவும் பிரபல ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான சிமோன் பைல்ஸ்க்கு, கடந்த ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் அவரின் மறு அறிமுகத்திற்காக இந்த விருது வழங்கப் பட்டுள்ளது.
லாரூஸ் ஆண்டிற்கான உலகின் மிகச் சிறந்த அணி விருது ஸ்பெயின் நாட்டின் மகளிர் கால்பந்து அணிக்கு வழங்கப்பட்டது.