இந்த ஆண்டில் கடல் வெப்ப நிலை அதிகரிப்பின் காரணமாக உலகின் தென்கோடி முனையில் அமைந்துள்ள பவளப் பாறையான லார்டு ஹாவ் தீவின் பவளப் பாறையானது நிறம் வெளிறலினால் பாதிக்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோவானது லார்டு ஹாவ் தீவை உலக இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த உலக பாரம்பரிய இடமாக வகைப்படுத்தியுள்ளது.
இந்த மீதமுள்ள எரிமலைத் தீவானது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையே தாஸ்மான் கடலில் அமைந்துள்ளது.
பவளப் பாறைகள்
பவளப் பாறைகள் என்பது “சூசாந்தலே” எனும் நுண்ணுயிர் பாசிகளுடன் ஒன்றுக்கொன்று உதவிக் கொள்ளும் பண்புடன் (பவளத்திற்குள் வாழும்) வாழும் விலங்குகளாகும்.
சூசாந்தலே ஆனது சூரிய ஒளியை உணவாக மாற்றுகிறது மற்றும் பவளங்களுக்கு 90 சதவிகித ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இது பவளங்களுக்குத் தேவையான நிறத்தைக் கொடுக்கிறது.
பவள நிறம் வெளிறல்
வெப்ப நிலை போன்ற பாதிக்கக் கூடிய நிலைமைகள் ஏற்படும் போது இந்த உறவு முறிந்து நிறம் வெளிறல் ஏற்படுகின்றது. இதன் விளைவாக பவளங்கள் அதன் சூசாந்தலேக்களை வெளியேற்றுகின்றன.
இது பவளத்தைப் பெரும்பாலும் நிறமற்றதாக ஆக்குகிறது. இது பவளத்தின் பிரகாசமான வெள்ளை நிறத் தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது.
ஒன்றுக்கொன்று உதவிக் கொள்ளும் தன்மையுடைய அதன் பாசிகளின் இழப்பு என்பது வெளிறிய பவளங்கள் வலுவற்றதாக இருக்கும்.