TNPSC Thervupettagam

லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது

October 25 , 2018 2126 days 733 0
  • புகழ்பெற்ற நீதிபதியான பாலி எஸ். நாரிமனுக்கு (89) பொது நிர்வாகத்தில் சிறப்புத்துவத்திற்கான 19-வது லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
  • புது டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் துணைத் தலைவரால் இவ்விருது இவருக்கு வழங்கப்பட்டது.

லால்பகதூர் சாஸ்திரி விருது

  • இந்த விருதானது, இந்தியாவின் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியின் நினைவாக லால்பகதூர் சாஸ்திரி மேலாண்மைப் பயிற்சி நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • இது தனிப்பட்ட மற்றும் சிறந்த வர்த்தகப் பங்களிப்பாளர், மேலாண்மைப் பயிற்றுநர், பொது நிர்வாகி, கல்வியாளர் அல்லது கல்வி நிறுவனத்தை நிறுவியவர்களுக்கு அவர்களின் நீடித்த, தனிப்பட்ட பங்களிப்பு மற்றும் சாதனைகளுக்காக வருடந்தோறும் வழங்கப்படுகிறது.
  • 2017 ஆம் ஆண்டு சுலாப் இன்டர்நேஷனலின் நிறுவனர் பிந்தேஸ்வர் பதக்குக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்