2017ஆம் ஆண்டின் கல்வி, மேலாண்மை, பொது நிர்வாகம் போன்றவற்றில் சிறந்து விளங்குவோருக்கான “18-வது லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருதினை” டாக்டர் பிந்தேஸ்வர் பதாக் பெற்றுள்ளார். இவ்விருதினை குடியரசுத் தலைவர் அவருக்கு வழங்கி கவுரவித்தார்.
டாக்டர் பிந்தேஸ்வர் பதாக் , சுலாப் இண்டர்நேஷனல் (Sulabh International) எனும் சமூக சேவை அமைப்பினை நிறுவியுள்ளார். இவர் சுலாப் சவ்ச்சாலயா முறை (Sulabh Sauchalaya System) எனும் குறைந்த செலவுடைய, அனைவருக்கும் பொருத்தமான கழிவறை தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து இந்தியா முழுவதும் செயல்படுத்தி வருகிறார்.
மனிதக் கழிவுகளை மனிதர்களே கையாளும் (manual Scavenging) நடைமுறைகளிலிருந்து மக்களை விடுவிப்பதற்காக இவர் மேற்கொண்ட முயற்சிகளையும் ஆற்றிய பங்கினையும் அங்கீகரிக்கும் விதமாக நியூயார்க் நகர மேயர் ஏப்ரல் 14, 2016ஆம் தேதியை “சர்வதேச டாக்டர் பிந்தேஷ்வர் தினமாக” அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 1991-ல் பத்ம பூஷண் விருதினையும் டாக்டர் பிந்தேஸ்வர் பதாக் பெற்றுள்ளார்.