TNPSC Thervupettagam

லாவென்டர் மற்றும் டோடா மாவட்டம்

February 25 , 2022 878 days 445 0
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர், டாக்டர். ஜிதேந்திரா சிங், ஜம்மு &  காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களின் மாவட்ட மேம்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் அமர்விற்குத் தலைமை தாங்கினார்.
  • லாவென்டரை ஒரு டோடா தயாரிப்புப் பொருளாக அறிவிப்பதற்கான முடிவானது இந்தச் சந்திப்பில் எடுக்கப்பட்டது.
  • ‘ஒரே மாவட்டம், ஒரே தயாரிப்புப் பொருள்’ என்ற முன்னெடுப்பின் கீழ், லாவென்டர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டது.
  • ஜம்மு & காஷ்மீரிலுள்ள டோடா மாவட்டமானது இந்தியாவின் ஊதாப் புரட்சி அல்லது லாவென்டர் சாகுபடியின் பிறப்பிடமாகும்.
  • ஊதாப் புரட்சியானது (லாவென்டர் சாகுபடி) மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நறுமணத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது.
  • நறுமணத் திட்டமானது, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிச் சபையினால், ஜம்முவிலுள்ள தனது ஆய்வகமான இந்திய ஒருங்கிணைந்த மருத்துவக் கல்வி நிறுவனத்தின் மூலம் அமல்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்