லாவ்லினா இந்தியாவிற்கு மூன்றாவது ஒலிம்பிக் பதக்கத்தை வென்று தந்துள்ளார்.
69 கிலோ எடைப் பிரிவிற்கான அரையிறுதிப் போட்டியில் துருக்கியைச் சேர்ந்த புசெனாஸ் சர்மேனலியை வீழ்த்தி லாவ்லினா வெண்கலப் பதக்கத்தினை வென்று உள்ளார்.
மேரி கோம் அவர்களையடுத்து லாவ்லினா போர்கோஹெய்ன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இரண்டாவது இந்தியப் பெண் குத்துச்சண்டை வீராங்கனை ஆவார்.
ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற முதல் அசாமியப் பெண்மணி எனும் பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர்கள் மேரி கோம் மற்றும் விஜேந்தர் சிங் ஆகியோரை அடுத்து ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்தினை வென்ற 3வது இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனையும் இவரே ஆவார்.
மேரி கோம் மற்றும் விஜேந்தர் சிங் ஆகியோர் முறையே 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்ஸ் மற்றும் 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் ஆகிய போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளனர்.