2028 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டியும் சேர்க்கப்பட உள்ளது.
ஐந்து ஆண்டுகளில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் சேர்ப்பதற்காக ஐந்து விளையாட்டுப் போட்டிகள் @LA28 ஒழுங்கமைப்புக் குழுவால் முன்மொழியப் பட்டுள்ளன.
பேஸ்பால்-மென்பந்து
கிரிக்கெட்
கொடி கால்பந்து
லாக்ரோஸ்
ஸ்குவாஷ்
1900 ஆம் ஆண்டில் பாரீசு நகரில் நடைபெற்ற ஒரே ஒரு ஒலிம்பிக் போட்டியில் மட்டுமே கிரிக்கெட் போட்டி விளையாடப்பட்டுள்ள நிலையில், இதன் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பிரான்சு ஆகிய அணிகள் மோதின.