TNPSC Thervupettagam

லிங்காயத்துகள் – சமய சிறுபான்மையினர் அந்தஸ்து

March 23 , 2018 2470 days 1690 0
  • கர்நாடக மாநில கேபினெட் லிங்காயத்துகளை சமய சிறுபான்மையினராக அங்கீகரித்துள்ளது. அதோடு பசவன்னாவை பின்பற்றும் வீரசைவர்களை லிங்காயத் சமூகத்தின் ஒரு பிரிவினர் எனவும் அறிவித்துள்ளது. இதன் மூலம் HN நாகமோகன் குழுவின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்த முன்மொழிவு, இறுதி ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும்.

லிங்காயத்துகள்  –  வீரசைவர்கள்

  • லிங்காயத் ஒரு தனித்துவமான சைவ மதப் பாரம்பரியம் ஆகும். லிங்காயத்துகள் 12ஆம் நூற்றாண்டு புலவர் – சமூகசீர்திருத்தவாதி - தத்துவியலாளர், என பன்முகத்தன்மை கொண்ட பசவேஷ்வராவை பின்பற்றுபவர்களாவர். பசவேஷ்வரா, சாதி அமைப்பு மற்றும் வேதச் சடங்குகளை எதிர்த்து இந்து மதத்திற்கு எதிராக கிளச்சியில் ஈடுபட்டவராவார்.
  • இந்த சமூகத்திலுள்ள மக்கள் கண்டிப்பான ஏக தத்துவவாதிகளாவர் (Strict Monotheist). இவர்கள் இஸ்தலிங்கம் வடிவிலான லிங்கத்தை (சிவனை) மட்டுமே வழிபடுபவர்களாவர்.
  • வேதத்தைக் கடைப்பிடிக்கும் மற்ற சாதி அமைப்புகளுக்கு ஆதரவு நல்கும் சைவ சமயமான வீரசைவத்திலிருந்து தங்களை லிங்காயத்துகள் வேறுபட்டவர்களாக கருதுகின்றனர்.
  • வீரசைவர்கள், தங்களுடைய சமயம் (வீரசைவம்) சிவனால் ஏற்படுத்தப்பட்ட பண்டைய கால சமயம் எனவும், பசவன்னா தங்களது சமயத்தின் ஒரு துறவியெனவும் கருதுகின்றனர்.
  • இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களின் (லிங்காயத்துகள்) மக்கள் தொகை கர்நாடகாவில் 17% ஆக இருப்பினும், இவர்கள் பெரும்பாலும் வடக்கு கர்நாடகாவில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடங்களில் 100 இடங்களில் ஆதிக்கம்  செலுத்துகின்றனர்.
  • இந்த சமூகத்திலிருந்து ஒன்பது முதலமைச்சர்கள் இருந்துள்ளனர்.

வரலாற்றுப் பின்புலம்

  • லிங்காயத்துகளுக்கானத் தனிப்பட்ட சமய அடையாளத்திற்கான இயக்கம் 1942க்கு தொடங்கியிருந்தாலும் 2017ல் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவால் இது புத்துயிர் பெற்றது.
  • டிசம்பர் 2017ல், HN-நாகமோகன் தாஸ் தலைமையில் ஏழு நபர்கள் கொண்ட ஒரு வல்லுநர் குழு ஐந்து தனிப்பட்டக் கோரிக்கைகளை ஆராய்வதற்காக கர்நாடக அரசால் அமைக்கப்பட்டது. இந்த ஐந்து கோரிக்கைகளில்  மூன்று கோரிக்கைகள் லிங்காயத்துகளுக்கான தனிப்பட்ட சமய சிறுபான்மை அந்தஸ்து தொடர்பானது.
  • இக்குழுவில் ஒரு தரப்பினர் வீரசைவம் மற்றும் லிங்காயத்துகள்  ஆகிய இரண்டு பிரிவினரும் ஒன்று என்ற அடிப்படையில் இரு பிரிவினருக்கும் சிறுபான்மையின அந்தஸ்து  என்ற கோரிக்கையை வைத்தனர். மற்றொரு தரப்பினர் வீரசைவர்கள் இந்துகளாகக் கருதப்படுவதால் லிங்காயத்துகளுக்கு மட்டும் சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.
  • HN நாகமோகன்தாஸ் குழு மார்ச் 2, 2018 அன்று தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்து அவ்வறிக்கையில் லிங்காயத் சமூகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க பரிந்துரை செய்தது.
  • லிங்காயத் சமயத்தை இந்து சமயத்திலிருந்து வேறுபடுத்திக் காட்ட போதிய ஆதாரங்கள் உள்ளன என்றும், மற்றொருப் பிரிவான,  சிறுபான்மையின அந்தஸ்தைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட வீரசைவர்களும்  லிங்காயத் சமயம் என்ற மிகப்பெரிய குடையின் கீழ் ஒரு பகுதியாக  இருக்க முடியும் எனவும் இந்தக் குழு தனது  அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்