TNPSC Thervupettagam

லித்தியம் சல்பர் மின்கலன்

January 10 , 2020 1655 days 726 0
  • உலகின் மிகவும் திறனுள்ள லித்தியம் – சல்பர் மின்கலனை (lithium-sulfur - Li-S) உருவாக்கியுள்ளதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
  • இது தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு ஒரு திறன்பேசியை இயக்கும் திறன் கொண்டது. இந்த மின்கலத்தின் மூலம் ஒரு மின்சார மகிழுந்தை 1,000 கி.மீ தூரத்திற்குச் செலுத்த முடியும்.
  • Li-S மின்கலன்களின் குறைந்த உற்பத்தி செலவு, ஆற்றல் திறன் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றின் காரணமாக லித்தியம் அயன் (லி-அயன்) மின்கலன்களுக்கு அடுத்த வந்த மின்கலன்களாக இவை கருதப்படுகின்றன.
  • சல்பர் அதிக அளவு கிடைப்பதால் இந்த வகை மின்கலன்களின் உற்பத்திச் செலவு மிகவும் குறைவாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்