TNPSC Thervupettagam

லிபியா அமைதி மாநாடு

January 20 , 2020 1679 days 576 0
  • லிபியா அமைதி மாநாடானது சமீபத்தில் ஜெர்மனியில் பெர்லினில் நடத்தப்பட்டது.
  • லிபியாவில் அமைதி திரும்புவதற்கான ஒரு அமைதித் தீர்மானத்திற்காக முக்கியமான நாடுகள் "முழு உறுதியுடன்" இருப்பதாக ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.
  • ஜெர்மன் பிரதமரான  ஏஞ்சலா மெர்க்ல்லுடன் ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின், துருக்கிய அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மெக்ரான் மற்றும் இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
  • ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, அல்ஜீரியா, சீனா மற்றும் காங்கோ குடியரசு ஆகியவை இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்ட பிற நாடுகளாகும்.
  • ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், ஆப்பிரிக்க ஒன்றியம் மற்றும் அரபு நாடுகள் குழு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
  • லிபிய அமைதி முன்னெடுப்புகள் என்பது இரண்டாவது லிபிய உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட கூட்டங்கள், ஒப்பந்தங்கள் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவை அடங்கிய ஒரு தொடர் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்