நிர்வாகத்தின் அனைத்து பணியிடங்களிலும் பெண் அலுவலர்களை மட்டும் பணியமர்த்தியதற்காக மத்திய இரயில்வே மண்டலத்தைச் சேர்ந்த மாதுங்கா (Matunga) புறநகர் இரயில் நிலையம் 2018-ஆம் ஆண்டிற்கான லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
முழுவதும் பெண் பணியாளர்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் நாட்டின் முதல் இரயில் நிலையமாக மாதுங்கா புறநகர் இரயில் நிலையம் 6 மாதத்திற்கு முன்பு உருவானதைத் தொடர்ந்து தற்போது இந்த ரயில் நிலையம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
2017-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்திலிருந்து இந்திய இரயில்வேயில் முதன்முறையாக, இந்த இரயில் நிலையம் பிரத்யேகமாக பெண் அலுவலர்களால் மட்டுமே நிர்வகிக்கப்படுகின்றது.
இந்திய இரயில்வேயின் மும்பை பிராந்தியப் பிரிவு பெண்களுக்கான அதிகாரமளிப்பில் சில முக்கிய சாதனைகளை படைத்துள்ளது.
அவையாவன,
இந்தியாவின் முதல் பெண் இரயில் ஓட்டுநராக சுரேகா போஷலே யாதவ் 1988 ஆண்டு மத்திய இரயில்வேயில் நியமிக்கப்பட்டார்.
உலகின் முதல் பெண்களுக்கான சிறப்பு புறநகர் இரயில் மேற்கத்திய இரயில்வே மண்டலத்தில் 1992-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.