TNPSC Thervupettagam
December 11 , 2019 1692 days 660 0
  • உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முதலாவது மலையாளப் பெண் வழக்குரைஞரான லில்லி தாமஸ் (91) சமீபத்தில் காலமானார்.
  • இந்தியாவில் சட்டத் துறையில் முதுகலைப் படிப்பை முடித்த முதலாவது பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
  • முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை தொடர்பான வழக்கைக் கையாண்ட வழக்குரைஞர்களில் லில்லி தாமஸும் ஒருவராவார்.
  • மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8 (4)ஐ நீக்கப் போராடிய இவரது மனுவிற்காக இவர் மிகப் பிரபலமாக அறியப்படுகின்றார்.
  • 2013 ஆம் ஆண்டில் தண்டனை பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களைக் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்குத் தானாகவே தகுதி இழக்கச் செய்யும் உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு அதுவாகும்.
  • லில்லி தாமஸ் இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code - IPC) பிரிவு 494ஐ (கணவன் அல்லது மனைவியின் வாழ்நாளில் மீண்டும் திருமணம் செய்து கொள்வது தொடர்பான) எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு  வழக்கு தொடுத்திருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்