லிவிங் பிளானட் அறிக்கை (2022) என்பது உலக வனவிலங்கு நிதியம் மற்றும் லண்டனின் விலங்கியல் சங்கம் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
1970 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் உலக வனவிலங்குகளின் எண்ணிக்கையில் 69 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
இது உலகெங்கிலும் உள்ள தனித்து வாழும் விலங்குகளில் 69 சதவீதம் குறைந்து விட்டது என பொருள்படாது.
இந்த அறிக்கை 5,230 இனங்களைச் சேர்ந்த 32,000 உயிரினங்களை ஆய்வு செய்தது.
அமேசான் மழைக்காடுகள் அமைந்துள்ள இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியில், 1970 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 94 சதவீத வன விலங்குகளின் எண்ணிக்கையில் மிக அதிகமான சரிவானது பதிவாகியுள்ளது.
இதே காலக் கட்டத்தில் ஆப்பிரிக்காவில் இரண்டாவது அதிகபட்ச சரிவாக 66 சதவிகிதமும், அதைத் தொடர்ந்து பசிபிக் பகுதியில் 55 சதவிகிதமும் பதிவாகியுள்ளன.
வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய பகுதிகளில் முறையே 20 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற அளவில் சரிவு பதிவாகி குறைவான இயற்கை வீழ்ச்சி என்ற அளவில் பதிவாகி உள்ளது.
நன்னீர் வாழ் இனங்களின் எண்ணிக்கை 83 சதவீதம் குறைந்துள்ளது.
சதுப்பு நிலங்களில் மீன்வளர்ப்பு, வேளாண்மை மற்றும் கடலோர வளர்ச்சி ஆகியவற்றில் ஆண்டிற்கு 0.13% வீதம் தொடர்ந்து இழப்பு ஏற்படுகின்றன.
இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள சுந்தரவன சதுப்புநிலக் காடுகளில் சுமார் 137 சதுர கிலோமீட்டர்கள் 1985 ஆம் ஆண்டு முதல் கடல் அரிப்பிற்கு உள்ளாக்கப் பட்டன.