TNPSC Thervupettagam

லிவிங் பிளானட் அறிக்கை 2022

October 19 , 2022 769 days 418 0
  • லிவிங் பிளானட் அறிக்கை (2022) என்பது உலக வனவிலங்கு நிதியம் மற்றும் லண்டனின் விலங்கியல் சங்கம் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
  • 1970 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் உலக வனவிலங்குகளின் எண்ணிக்கையில் 69 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
  • இது உலகெங்கிலும் உள்ள தனித்து வாழும் விலங்குகளில் 69 சதவீதம் குறைந்து விட்டது  என பொருள்படாது.
  • இந்த அறிக்கை 5,230 இனங்களைச் சேர்ந்த 32,000 உயிரினங்களை ஆய்வு செய்தது.
  • அமேசான் மழைக்காடுகள் அமைந்துள்ள இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியில், 1970 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 94 சதவீத வன விலங்குகளின் எண்ணிக்கையில் மிக அதிகமான சரிவானது பதிவாகியுள்ளது.
  • இதே காலக் கட்டத்தில் ஆப்பிரிக்காவில் இரண்டாவது அதிகபட்ச சரிவாக 66 சதவிகிதமும், அதைத் தொடர்ந்து பசிபிக் பகுதியில் 55 சதவிகிதமும் பதிவாகியுள்ளன.
  • வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய பகுதிகளில் முறையே 20 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற அளவில் சரிவு பதிவாகி குறைவான இயற்கை வீழ்ச்சி என்ற அளவில் பதிவாகி உள்ளது.
  • நன்னீர் வாழ் இனங்களின் எண்ணிக்கை 83 சதவீதம் குறைந்துள்ளது.
  • சதுப்பு நிலங்களில் மீன்வளர்ப்பு, வேளாண்மை மற்றும் கடலோர வளர்ச்சி ஆகியவற்றில் ஆண்டிற்கு 0.13% வீதம் தொடர்ந்து இழப்பு ஏற்படுகின்றன.
  • இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள சுந்தரவன சதுப்புநிலக் காடுகளில் சுமார் 137 சதுர கிலோமீட்டர்கள் 1985 ஆம் ஆண்டு முதல் கடல் அரிப்பிற்கு உள்ளாக்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்