லிவிங் பிளானட் அறிக்கை (2024) என்பது உலக வனவிலங்கு நிதியம் (WWF) என்ற பாதுகாப்பு அமைப்பினால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மதிப்பீடாகும்.
1970 ஆம் ஆண்டிலிருந்து கண்காணிக்கப்படும் வனவிலங்குகளின் சராசரி எண்ணிக்கை 73 சதவிகிதம் குறைந்துள்ளது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
சுமார் 35,000 வனவிலங்குகளின் எண்ணிக்கை மற்றும் 5,495 வகையான நீர் நில வாழ்விகள், பறவைகள், மீன்கள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வன இனங்கள் ஆகியவை கணிசமாகக் குறைந்துள்ளன.
1970 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், 85 சதவீதம் சரிவுடன் நன்னீர் வாழ் இனங்கள் தான் மிகவும் பாதிக்கப்பட்ட இனங்களாக உள்ளன.
அதைத் தொடர்ந்து நிலவாழ் இனங்களில் 69 சதவீத சரிவும், கடல் வாழ் இனங்களின் எண்ணிக்கையில் 56 சதவீத சரிவும் பதிவாகியுள்ளது.
இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆகிய பகுதிகளில் உயிரினங்களின் எண்ணிக்கை 95 சதவீதம் குறைந்துள்ளது, அதைத் தொடர்ந்து ஆப்பிரிக்காவில் 76 சதவீதம் சரிவானது பதிவாகியுள்ளது.
ஆசியா-பசிபிக் பிராந்தியங்களில் ஒரு சேர 60 சதவீத சரிவானது பதிவாகியுள்ளது.
1950 முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் சினூக் சால்மன் மீன்களின் எண்ணிக்கை 88 சதவீதம் குறைந்துள்ளது.