TNPSC Thervupettagam

லிஸ்பன் பிரகடனம்

July 10 , 2022 744 days 396 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் 2வது பெருங்கடல் மாநாடு லிஸ்பன் பிரகடனத்துடன் நிறைவடைந்தது.
  • 'நமது பெருங்கடல், நமது எதிர்காலம்: நடவடிக்கை மேற்கொள்வதற்கான அழைப்பு' என்று இந்தப் பிரகடனத்திற்குத் தலைப்பிடப்பட்டுள்ளது.
  • இது லிஸ்பனில் கென்யா மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளால் இணைந்து நடத்தப் பட்டது.

முக்கியக் கூறுகள்

  • 2030 ஆம் ஆண்டிற்குள் குறைந்தது 30% அளவிற்குத் தேசிய கடல்சார் மண்டலங்களைப் பாதுகாத்தல்
  • 2040 ஆம் ஆண்டிற்குள் கார்பன் நடுநிலைத் தன்மையினை அடைதல்
  • கடல் அமிலமயமாக்கல், பருவநிலையின் நெகிழ்திறன் மற்றும் கண்காணிப்பு பற்றிய ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்தல்
  • கடல்சார் அவசரநிலையை எதிர்கொள்வதற்கான அறிவியல் அடிப்படையிலான மற்றும் புதுமையான நடவடிக்கைகளை உருவாக்குதல்
  • பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் 14வது நிலையான மேம்பாட்டு இலக்குகளின் அமலாக்கத்தினைச் செயல்படுத்துதல் - ஒரு நிலையான கடல் சார்ந்தப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு அவர்களின் பங்கேற்பினை அங்கீகரிப்பது முக்கியமானதாகும்.
  • ஒவ்வொரு நாடுகளின் 200 மைல் (322 கிலோமீட்டர்) தொலைவு வரையான பிரத்தியேகப் பொருளாதார மண்டலங்களுக்கு வெளியே அமைந்துள்ள தேசிய அதிகார எல்லை வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் உள்ள பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாத்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்