சமீபத்தில் கனடாவின் மார்க்காமில் 2018 ஆம் ஆண்டிற்கான லீ நிங் BWF உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
ஆண்களுக்கான ஒற்றையர் இளையோர் சாம்பியன்ஷிப் அரை இறுதிப் போட்டியில் லக்ஷயா சென் தாய்லாந்தைச் சேர்ந்த குன்லாவுட் விட்டிட்சரனிடம் தோல்வியுற்றார். லக்ஷயா சென் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இறுதிப் போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த குன்லாவுட் விட்டிட்சரன் ஜப்பான் வீரரான கொடை நரோகாவை வீழ்த்தி ஆண்களுக்கான ஒற்றையர் பட்டத்தை வென்றார்.
இந்த ஆண்டின் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வென்ற ஒரே பதக்கம் இதுவாகும்.
2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற BWF உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர் சாய்னா நேவால் ஆவார்.
DI ஜிஜியான் மற்றும் WANG ஜங் ஆகியோர் ஆண்களுக்கான இரட்டையர் பட்டத்தை வென்றனர்.