TNPSC Thervupettagam

லீப் ஆண்டு 2024

January 4 , 2024 324 days 364 0
  • 2024 ஆம் ஆண்டு ஒரு லீப் ஆண்டு (மிகு நாளாண்டு) ஆகும்.
  • அதாவது இந்த ஆண்டில் 365 நாட்களுக்குப் பதிலாக 366 நாட்களும், பிப்ரவரி மாதத்தில் 28 தேதிக்குப் பதிலாக 29 நாட்களும் இருக்கும்.
  • பொதுவாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு லீப் ஆண்டு வரும்.
  • கடைசியாக வந்த லீப் ஆண்டு 2020 ஆகும்.
  • ஆனால் லீப் ஆண்டு எல்லா நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் வராது, எனவே சில ஆண்டுகள் அதற்கு விதிவிலக்காகும்.
  • பூமி சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க 365 நாட்கள், ஐந்து மணி நேரம், 48 நிமிடங்கள் மற்றும் 46 வினாடிகள் எடுத்துக் கொள்கிறது.
  • இவ்வாறு, கி.மு. 46 ஆம் ஆண்டில் ரோம நாட்டு தலைவர் ஜூலியஸ் சீசரால் பணி அமர்த்தப்பட்ட அறிஞர்கள், ஓராண்டை 365 நாட்களாக முழுமையாக்கினர்.
  • மீதமுள்ள ஆறு மணி நேரத்தை நான்கால் பெருக்கி 24 மணிநேரம் (ஒரு நாள்) ஆக்கி, ஒவ்வொரு நான்காவது ஆண்டிலும் சேர்த்தனர்.
  • பின்னர், 400 என்ற எண்ணினால் வகுபடுகின்ற, 00 என்ற எண்ணுடன் முடிவடையும் ஆண்டுகள் லீப் ஆண்டுகள் என்று அழைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
  • எனவே, 1900 மற்றும் 2100 ஆகியவை லீப் ஆண்டுகளாக கணக்கிடப்படாது, ஆனால் 2000 ஆம் ஆண்டு லீப் ஆண்டாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்