TNPSC Thervupettagam

லும்பி-ப்ரோவாக்ச்சின்ட் தடுப்பூசி

January 11 , 2023 687 days 379 0
  • புனேவில் உள்ள கால்நடை சார்ந்த உயிரியல் பொருட்கள் தயாரிப்புகள் நிறுவனம் (IVBP) ஆனது "லும்பி-ப்ரோவாக்" தடுப்பூசியின் வணிகரீதியான உற்பத்திக்காக என்று "பிரத்தியேகம் சாரா உரிமைகளை" பெற்றுள்ளது.
  • லும்பி-ப்ரோவாக் தடுப்பூசியானது, விலங்குகளில் பயன்படுத்துவதற்கு என்று மிகவும் பாதுகாப்பானதோடு தோல் தடிப்பு நோய் வைரசுடன் தொடர்புடைய ஆன்டிபாடிகள் மற்றும் செல் வழி நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றினைத் தூண்டுகிறது.
  • தோல் தடிப்பு நோய்க்கு எதிரான எதிர்ப்புச் சக்தியினை விலங்குகளுக்குச் செயற்கை முறையில் வழங்குவதற்காக (சுமார் ஒரு வருடத்திற்குப் பாதுகாப்பினை வழங்கும்) இந்தத் தடுப்பூசியானது பயன்படுத்தப் படுகிறது.
  • தோல் தடிப்பு நோய் (LSD) என்பது கால்நடைகள் மற்றும் எருமைகளில் பரவும் வைரஸ் தொற்று நோயாகும் என்பதோடு, இது ஒப்பீட்டளவில் குறைந்த அளவு உயிரிழப்பினை ஏற்படுத்துகிறது.
  • தோல் தடிப்பு நோய் வைரஸ் என்பது பாக்ஸ்விரிடே குடும்பத்தில் உள்ள கேப்ரிபோக்ஸ் வைரஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒரு வைரஸ் ஆகும்.
  • கொசுக்கள், உண்ணிகள் மற்றும் சில வகையான ஈக்கள் போன்ற இரத்தத்தை உண்ணும் பூச்சிகளால் இது பரவுகிறது.
  • இது மனிதர்களைப் பாதிக்காது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்