மத்திய வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகமானது கூகுள் வரைபடத்தில் லூ மதிப்பாய்வு பிரச்சாரத்தை தொடங்குவதற்காக கூகுள் உடன் கூட்டிணைந்துள்ளது.
இந்த கூட்டுப் பிரச்சாரமானது நகர்ப்புறத்திற்கான ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது இந்தியா முழுவதும் பொதுக் கழிப்பறைகளை கண்டறியவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதை எளிமையாக்கவும் 2018 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் முழுவதும் நடைபெறும்.