ரஷ்யாவின் லூனா-25 விண்கலமானது கட்டுப்பாடற்ற சுற்றுப் பாதையில் சிக்கி சுழன்று நிலவின் மீது விழுந்தது.
1976 ஆம் ஆண்டிற்குப் பிறகு ரஷ்யா அனுப்பிய முதல் நிலவு ஆய்வு விண்கலம் இது ஆகும்.
விண்கல இயக்குனர் இல்லாத இந்த விண்கலம் ஆனது நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதை இலக்காகக் கொண்டிருந்தது.
2019 ஆம் ஆண்டில் தென் துருவத்தில் தரையிறங்குவதற்கான இந்திய விண்கலத்தின் முந்தைய முயற்சியானது, அந்த விண்கலம் சந்திரனின் நிலவின் மேற்பரப்பில் மோதியதால் தோல்வியடைந்தது.
லூனா 25 உடன், ஜூலை 14 ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இதுவரையில், சோவியத் ஒன்றியம், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே வெற்றிகரமாக நிலவில் தரையிறங்குவதைச் சாதித்துள்ளன.