TNPSC Thervupettagam

லெபனான் – கஞ்சாச் சாகுபடி (Marijuana)

April 29 , 2020 1579 days 693 0
  • கஞ்சாச் சாகுபடியைச் சட்டப்பூர்வமாக்கிய முதலாவது அரபு நாடு லெபனான் ஆகும். 
  • கஞ்சாச் செடியானது லெபனானில் உள்ள வளமான பீக்கா பள்ளத்தாக்கில் சட்ட விரோதமாக பயிரிடப்பட்டு வந்தது.
  • ஐக்கிய நாடுகள் அமைப்பின்படி, மொராக்கோ மற்றும் ஆப்கானிஸ்தானிற்குப் பிறகு உலகின் 3வது மிகப்பெரிய கஞ்சா பிசின் விநியோக நாடு லெபனான் ஆகும்.
  • லெபனான் நாட்டைத் தவிர, தங்க முக்கோணப் பகுதி மற்றும் தங்கப் பிறைப் பகுதி ஆகியவை இந்த அபினி (opium) உற்பத்தியில் பங்கு கொண்டுள்ளன.
  • தங்கப் பிறைப் பகுதியானது ஈரான், பாகிஸ்தான் மற்றும்  ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியுள்ளது.
  • வரைபடத்தில் இந்த நாடுகள் இணைந்து பிறை வடிவத்தை உருவாக்குவதனால், இதற்கு தங்கப் பிறை என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • தங்க முக்கோணமானது தாய்லாந்து, மியான்மர், லாவோஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கியுள்ளது.
  • ருவாக் மற்றும் மெக்காங் ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இந்தப் பகுதிகள் சந்திப்பதால், இதற்கு தங்க முக்கோணம் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்