லெபிடோபிகோப்சிஸ் டைஃப்பஸின் மைட்டோகாண்ட்ரியல் என்ற மரபணுவை முதன் முறையாக அறிவியலாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
இது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தனித்துவமான நன்னீர் வாழ் மீன் இனமாகும்.
இது கேரளாவின் பெரியார் புலிகள் வளங்காப்பகத்திற்குள் மட்டுமே நன்கு காணப் படுகின்றது.
லெபிடோபிகோப்சிஸ் டைஃப்பஸ் ஒரே கிளை வகையினை கொண்ட இனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு (மோனோடைப்பிக்) ஆகும்.
மைட்டோஜெனோம் மரபணு வரிசையாக்கத்தின் நோக்கம் ஆனது, ஓர் இனத்தின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்து கொள்வதற்கும், அதன் இணை உயிர்களிடமிருந்து அவை எவ்வாறு வேறுபடுகின்றன என்பதைப் புரிந்து கொள்வதும் ஆகும்.
லெபிடோபிகோப்சிஸ் டைஃப்பஸ் என்பது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் 'அருகி வரும் இனம் ஆக' பட்டியலிடப்பட்ட ஓர் இனமாகும்.