இந்தியாவின் மிக அதிகமாக மதிப்பளிக்கப்பட்ட படைத்தளபதிகளில் ஒருவரான லெப்டினன்ட் ஜோராவர் சந்த் பக்ஷ் புதுதில்லியில் தமது 97வது வயதில் காலமானார்.
தமது நண்பர்களால் பிரியமாக ஜோரு என்று அழைக்கப்படும் இவர், தமது வீரத்திற்காக மகாவீர் சக்ரா, வீர் சக்ரா, படைகளில் குறிப்பிடத்தக்கவர் (Mention-in-Despatches) ஆகிய விருதுகளோடு, மேன்மை தங்கிய சேவைக்காக பரம் விசிஷ்ட சேவா பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
இவரது முதல் முக்கியமான பங்களிப்பு இரண்டாம் உலகப் போரில் பர்மாவில் வலுவான படை கொண்டிருந்த ஜப்பானிய படைகளுக்கு எதிராக போரிட்டமையே ஆகும். இதற்காக இவர் படைப்பிரிவுகல் குறிப்பிடத்தக்கவர் (Mention–in-Despatches) என்ற விருதைப் பெற்றுள்ளார்.
பிரிவினைக்கு பிறகு இவர் இந்திய ராணுவத்தின் ஐந்தாவது கூர்க்கா துப்பாக்கிகள் என்ற படைப்பிரிவிற்கு மாற்றப்பட்டார். அதன் பின் 1947-48ம் ஆண்டுகளில் நடந்த இந்திய-பாகிஸ்தானிய யுத்தத்தில் பங்கெடுத்தார். இதற்காக அவருக்கு 1948ம் ஆண்டு ஜூலை மாதம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
1949ம் ஆண்டு, மதிப்புமிக்க உளவு பார்க்கும் சேவைக்காக இந்திய ஆயுதப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் மெக்கிரேகர் பதக்கத்தை பெற்றார்.
1965ஆம் ஆண்டு யுத்தத்தில் பாகிஸ்தான் ராணுவத்திடமிருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் யுக்தி வாய்ந்த ஹாஜிபிர் கணவாயை கைப்பற்றியதில் பக்ஸ் முக்கிய பங்கு வகித்தார். இதற்காக அவருக்கு மகாவீர் சக்ரா அளிக்கப்பட்டது.
மேலும், இவர் 1971ம் ஆண்டு யுத்த நடவடிக்கைகளில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்திற்கு எதிராக கோழிக் கழுத்துப் பகுதியை (Chicken Neck Corriodr) கைப்பற்றியதில் முக்கிய பங்கு வகித்தார். இதற்காக இவருக்கு பரம் விசிஷ்ட சேவா பதக்கம் வழங்கப்பட்டது.