TNPSC Thervupettagam

தமிழ்நாடு தினம் - ஜூலை 18

July 19 , 2022 769 days 118 0
  • தமிழ்நாடு மாநிலம் உருவானதை நினைவு கூரும் வகையில் தமிழ்நாடு தினம் கொண்டாடப் படுகிறது.
  • தமிழ்நாடு மாநிலம் ஆனது 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று மெட்ராஸ் மாநிலம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.
  • அண்ணாதுரை அவர்களின் அரசால் சென்னை மாநிலச் சட்டப் பேரவையில் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யக் கோரி ஒருமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
  • 1967 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதியன்று, மதராஸ் மாநிலம் அதிகாரப் பூர்வமாகத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது.
  • தமிழ்நாடு அரசானது 2019 ஆம் ஆண்டில், ஒவ்வோர் ஆண்டின் நவம்பர் 01 ஆம் தேதியினைத் தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்தது.
  • பின்னர், 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், ஒவ்வோர் ஆண்டின் ஜூலை 18 ஆம் தேதியானது தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்