TNPSC Thervupettagam

லேபியோ பிலிப்பெரஸ் – புதிய வகை சாப்பிடக்கூடிய மீன் இனம் கேரளாவின் பம்பா நதியில் கண்டுபிடிப்பு

September 11 , 2017 2678 days 1028 0
  • சாப்பிடக்கூடிய புதிய நன்னீர்வகை மீன் இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பம்பா நதியில் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு லேபியோ பிலிப்பெரஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது லேபியோ இனத்தைச் சார்ந்ததாகும்.
  • லேபியோ இனத்தைச் சார்ந்த மீன் வகைகள் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை, பர்மா, மலேசியா, சிரியா மற்றும் ஆப்பிரிக்காவின் வெப்பமண்டலப் பகுதி ஆகிய இடங்களில் உள்ள உள்நாட்டு நீர்நிலைகளில் பரவலாகக் காணப்படுகிறது.
  • இந்தியாவில் மட்டும் 31 வகையான லேபியோ இனத்தைச் சார்ந்த மீன் வகைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதில் ‘ரோகு’ என்றறியப்படும் லேபியா ரோஹிதா உள்பட அனைத்து வகைகளும் பெருவாரியாக மீன்வளர்ப்புத் தொழிலில் பயன்படுகின்றன.
  • இந்த புதிய லேபியா இன வகை மீன்கள் கேரளாவில் மட்டும் கண்டறியப்பட்டுள்ள இரண்டாவது வகையாகும். ஏற்கெனவே கேரளாவில் இருந்து கண்டறியப்பட்டுள்ள மற்ற லேபியோ இன வகையானது “லேபியோ டசுமியரி” ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்