இந்திய தாவரவியலாளரான கமல்ஜித் பாவா லண்டனின் லைனியன் சங்கத்திடமிருந்து தாவரவியலுக்கு என்று வழங்கப்படும் பெருமைமிகு லைனியன் (Linnean) பதக்கத்தை பெற்றுள்ளார்.
இவர் பெங்களூருவைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான சூழலியல் மற்றும் சுற்றுச் சூழலின் ஆய்விற்கான அசோகா அறக்கட்டளையின் (Ashoka Trust for Research in Ecology and the Environment - ATREE) தலைவர் ஆவார்.
1888ம் ஆண்டில் இந்த விருது நிறுவப்பட்டதிலிருந்து இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் டாக்டர் பாவா ஆவார்.
மத்திய அமெரிக்கா, மேற்கு மலைத்தொடர் மற்றும் கிழக்கு இமயமலைப் பகுதிகளில் உள்ள காடுகளின் பல்லுயிர்த்தன்மை பற்றிய பல ஆண்டுகளுக்கான ஆராய்ச்சிக்காகவும், வெப்ப மண்டலத் தாவரங்களின் பரிணாம வளர்ச்சி, வெப்ப மண்டல காடுகள் அழிப்பு, மரம் சாராத வனப்பொருட்கள் ஆகியவற்றின் மீதான ஆராய்ச்சிக்காகவும் இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார்.
இவரது சிறந்த சேவைகள் பல்துறை இதழான கன்சர்வேசன் என்ற பத்திரிக்கைக்கு திறந்த முறை அணுகுதலை ஏற்படுத்தியதிலும், 2003ம் ஆண்டில் நேரடி குடிமகன் -அறிவியல் களஞ்சியமான இந்தியா பல்லுயிர்த்தன்மை இணையவாயில் (India Biodiversity Portal) ஆகியவற்றை நிறுவியதிலும், ATREE என்ற உலகளவில் 18வது இடத்திலும் ஆசிய அளவில் இரண்டாவது இடத்திலும் உள்ள சுற்றுச் சூழலுக்கான சிந்தனைக் களஞ்சியத்தை ஏற்படுத்தியதிலும் அறியப்படுகின்றன.
இந்த விருது பாதுகாப்பு மற்றும் நீடித்தத் தன்மைக்கான பணியில் வழங்கப்படும் சிறந்த அங்கீகாரமாகும்.
லண்டனில் உள்ள லைனியன் சங்கத்தால் ஒவ்வொரு வருடமும் தாவரவியலாளருக்கு இவ்விருது வழங்கப்படுகின்றது.
உலகின் பழமையான மற்றும் செயல்பாட்டிலிருக்கும் உயிரியல் சங்கமான இந்த அமைப்பு 1788ம் ஆண்டில் நிறுவப்பட்டது. தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் பெயரிடும் முறைகளில் ஒன்றை நமக்கு அறிமுகப்படுத்தியவரான ஸ்வீடனின் புகழ்பெற்ற உயிரியலாளரான கார்ல் லைனியஸ் பெயர் கொண்டு இந்த அமைப்பு அழைக்கப்படுகின்றது.
தற்செயலாக, இந்தியத் தாவரங்களைப் பற்றிய முதல் முழுமையான தொகுப்பான, ஏழு தொகுதிகளைக் கொண்ட நினைவுச் சின்னமான பிரிட்டிஷ் இந்தியாவின் தாவரங்கள் (Flora of British India) என்ற புத்தகத்தை தொகுத்தவரான சர் ஜோசப்ஹீக்கர் லைனியன் பதக்கம் பெற்ற முதல் அறிவியலாளர் ஆவார்.