TNPSC Thervupettagam

லோக்பால் அமைப்பின் செயல்பாடு 2025

January 24 , 2025 2 days 62 0
  • லோக்பால் சட்டம் இயற்றப்பட்டு பன்னிரண்டு ஆண்டுகள் மற்றும் லோக்பால் செயல் படத் தொடங்கிய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அது வெறும் 24 வழக்குகளில் மட்டுமே விசாரணையைத் தொடங்க உத்தரவிட்டுள்ளது மற்றும் ஆறு வழக்குகளில் மட்டுமே வழக்குத் தொடர அனுமதி வழங்கியுள்ளது.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில், சரியான வடிவத்தில் இல்லாததால், லோக்பால் அமைப்பு ஆனது ஏராளமான அளவில், சுமார் 90% புகார்களை நிராகரித்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 முதல் டிசம்பர் மாதம் வரை 226 புகார்கள் பதிவு செய்யப் பட்டுள்ளதுடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 2,320 "குறைபாடுகள் இல்லாத" புகார்கள் லோக்பாலிடம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • மொத்தப் புகார்களில், சுமார் 3% அளவானது பிரதமர்/பாராளுமன்ற உறுப்பினர் / மத்திய அமைச்சர் மீதும், 21% புகார்கள் மத்திய அரசின் A, B, C அல்லது D பதவித் தர அதிகாரிகளுக்கு எதிராகவும் பதிவாகியிருந்தன.
  • மத்திய அரசு அமைப்புகளின் தலைவர் அல்லது அதன் உறுப்பினர்களுக்கு எதிரான சுமார் 35% புகார்களும், மாநில அரசு அதிகாரிகள் உட்பட "மற்ற நபர்கள்" பிரிவில் உள்ளவர்களுக்கு எதிரான 41% புகார்களும் இதில் அடங்கும்.
  • 2013 ஆம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாக்கள் சட்டத்தின் 53வது பிரிவின் படி, குற்றம் நிகழ்த்தப்பட்ட தேதியிலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் புகார் அளிக்கப் பட்டால் மட்டுமே அதை ஏற்று விசாரிக்க முடியும்.
  • லோக்பால் சட்டம் 2013 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டாலும், நீதிபதி பினாகி சந்திர கோஷ், 2019 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதியன்று மற்ற எட்டு உறுப்பினர்களுடன் நாட்டின் முதல் லோக்பால் ஆக நியமிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்