உச்ச நீதிமன்றம் ஆனது, உயர் நீதிமன்றங்களில் பணி புரியும் நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக்பால் அமைப்பின் உத்தரவிற்குத் தடை விதித்துள்ளது.
லோக்பால் அமைப்பிற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி A.M.கான்வில்கர் தலைமை தாங்கினார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள், ‘அரசு ஊழியர்கள்’ என்றும், அவர்கள் 2013 ஆம் ஆண்டின் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாச் சட்டத்தின் வரம்பிற்கு உட்பட்டவர்கள் என்றும் லோக்பால் தீர்ப்பளித்தது.
இந்தியத் தலைமை நீதிபதி உட்பட உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் விவகாரங்கள் மீது தனக்கு அதிகாரம் இல்லை என்று லோக்பால் அறிவித்திருந்தது.
உச்ச நீதிமன்றம் என்பது பாராளுமன்ற சட்டத்தினால் நிறுவப்பட்ட அல்லது மத்திய அரசால் நிதியளிக்கப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் "அமைப்பு" அல்ல.
எனவே, 1988 ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, இந்தியத் தலைமை நீதிபதி உள்ளிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ‘அரசு ஊழியர்கள்’ என்றாலும், லோக்பாலின் ஒரு அதிகார வரம்பிற்கு அவர்கள் உட்படமாட்டார்கள்.
2013 ஆம் ஆண்டு சட்டம் ஆனது, பாராளுமன்றத்தின் சட்டத்தினால் நிறுவப்பட்ட நீதி மன்ற நீதிபதிகளுக்கு வெளிப்படையான விதிவிலக்குகளை அளிக்கவில்லை.