ஹிமாலயப் பகுதிகளில் புது வருட தொடக்கத்தைக் குறிப்பதற்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பிரதேசத்தில் லோசார் பாரம்பரிய திருவிழா கொண்டாடப்படுகின்றது.
லடாக் பிரதேசத்தின் புத்தமதத்தினரால் கொண்டாடப்படும் சமுதாய அடிப்படையிலான சமூக மற்றும் மதம் சார் திருவிழாவான லோசார் திருவிழாவானது லடாக்கில் அமைந்துள்ள 19 புத்த மடாலயங்களில் 18 மடாலயங்களில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது.
திபெத்திய வார்த்தையான லோசார் என்பதன் பொருள் – புது வருடம் என்பதாகும்.
லடாக் மற்றும் திபெத்திய பிரதேசங்களின் மிக முக்கியத் திருவிழாவாகக் கருதப்படும் இத்திருவிழாவானது திபெத்திய சந்திர நாட்காட்டியின் (lunar calender) 11-வது மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது.