அருணாச்சலப் பிரதேச தலைநகர் இட்டா நகரில் உள்ள நியோகும் லபாங்க் மைதானத்தில் இட்டா நகரின் புத்த சமூகத்தவர் லோசார் திருவிழாவின் வெள்ளி விழாவை கொண்டாடியுள்ளனர்.
மார்ச் 2 முதல் மார்ச் 4 வரை இட்டா நகர் புத்தக் கலாச்சார கூட்டுறவுச் சங்கத்தால் இந்த 3 நாள் லோசார் திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது.
புத்த சமூகத்தவரால் புத்தாண்டுத் தினமாக கொண்டாடப்படும் லோசார் திருவிழாவானது புத்த நாட்காட்டியின் படி தற்போது 2145 பூமியின் நாய் வருடத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது.