TNPSC Thervupettagam
June 17 , 2020 1626 days 655 0
  • பல்வேறு ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட ஒரு குழுவானது மகாராஷ்டிராவின் லோனார் ஏரியானது ஏன் இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்ய இருக்கின்றது.
  • இந்த நீர்நிலையில் உள்ள உப்புத் தன்மை மற்றும் பாசிகளின் இருப்பு ஆகியவை இதற்குக் காரணம் என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.
  • லோனார் பள்ள ஏரியானது 1823 ஆம் ஆண்டில் ஆங்கிலேய அதிகாரியான CJE அலெக்சாந்தர் என்பவரால் ஒரு தனித்துவப் புவியியல் இடமாக அடையாளம் காணப் பட்டுள்ளது.
  • இது மகாராஷ்டிராவில் விண்கல் வீழ்ந்ததனால் உருவாக்கப்பட்ட மிகப் பழமையான ஒரு வட்டவடிவ ஏரியாகும்.
  • லோனார் பள்ளமானது 1979 ஆம் ஆண்டில் ஒரு புவியியல் பாரம்பரியத் தளமாக உருவெடுத்துள்ளது.
  • இது 50,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஏறக்குறைய ஒரு மிக இளமையான புவியியல் பகுதியாகும்.
  • லோனார் ஏரியானது இந்தியாவில் உள்ள ஒரு மிகப்பெரிய பசால்ட் (பாறைவகை) உருவாக்கமான தக்காண மடிப்புப் பகுதியில் காணப்படும் வேற்றுக் கிரகப் பொருள் மூலமான தாக்கத்தினால் உருவான பள்ளத்தில் அமைந்துள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்