லோனார் மற்றும் சுர் சரோவர் ஏரி
November 19 , 2020
1472 days
632
- மகாராஷ்டிராவில் உள்ள லோனார் ஏரி மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள சுர் சரோவர் ஏரி ஆகியவை ராம்சார் தளப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
- நாட்டில் உள்ள ஒரேயொரு பள்ள ஏரி (Crater lake) லோனார் ஏரி ஆகும்.
- இந்தப் பள்ளமானது தக்காணப் பீடபூமியின் தக்காணப் பொறிகளுக்குள் அமைந்து உள்ளது.
- பென்கங்கா மற்றும் பூர்ணா ஆகிய 2 சிறிய நீரோடைகள் லோனார் ஏரியில் கலக்கின்றன.
- லோனார் ஏரியானது சயானோ பாக்டீரியாவின் இருப்பின் காரணமாக பொதுவாக பச்சை நிறத்தில் காணப்படுகின்றது.
- இந்த ஏரியானது 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியது.
- இதற்குக் காரணம் ஹேலோபிலிக் ஆர்க்கியா (halophilic archaea) அல்லது ஹேலோ ஆர்க்கியா (haloarchea) எனப்படும் உப்பை விரும்பும் பாக்டீரியாவின் இருப்பு ஆகும்.
- இந்த பாக்டீரியாக்கள் அதிக உப்புத் தன்மையுடன் தொடர்புடையது ஆகும்.
- எனினும் இந்த ஏரியின் இளஞ்சிவப்பு நிறமானது நிரந்தரமானதல்ல.
- சூர் சரோவர் ஏரியானது கீதம் ஏரி என்றும் அழைக்கப் படுகின்றது.
- ராம்சார் ஒப்பந்தமானது யுனெஸ்கோவினால் ஈரானில் 1971 ஆம் ஆண்டில் கையெழுத்திடப் பட்டது.
- இந்த இரண்டு ஈரநிலங்களின் உள்ளடக்கத்தையும் சேர்த்து இந்தியாவில் உள்ள மொத்த தளங்களின் எண்ணிக்கை 41 ஆகும்.
- இதுவே தெற்கு ஆசியப் பகுதியில் மிக அதிகமானதாகும்.
Post Views:
632