தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி துறைமுக அறக்கட்டளை மற்றும் மத்திய கிடங்குக் கழகம் ஆகியவை நேரடித் துறைமுக நுழைவு (Direct Port Entry) வசதிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
DPE ஆனது தொழிற்சாலைகளிலிருந்துச் சரக்குக் கொள்கலன் முனையத்திற்கு சரக்குக் கொள்கலனின் நேரடி இயக்கத்தை ஏற்படுத்தும். இது கொள்கலன் சரக்கு நிலையத்தில் எந்தவொரு இடைநிலை கையாளுதலும் இல்லாமல் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் இயங்கும்.
தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய துறைமுகம் வ.உ.சி துறைமுக அறக்கட்டளையாகும். இது மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது.