72 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பசிபிக் கடல்களில் "நீல டிராகன்" என்று அழைக்கப் படும் ஒரு மாபெரும் விகாரமான விலங்கு காணப்பட்டது.
ஆராய்ச்சியாளர்கள் அந்த மாபெரும் விகார விலங்கிற்கு வகாயாமா சோர்யு, அதாவது நீல டிராகன் என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த உயர் நிலை வேட்டையாடும் விலங்கானது கிரெட்டேசியஸ் யுகத்தின் பிற்காலத்தில் அழிந்து போன, பெரிய கடல் ஊர்வன இனமான மோசாசர் (கடல் பல்லி இனஞ்சார்ந்த) ஆகும்.
ஜப்பானின் வகயாமா மாகாணத்தில் இந்தப் புதைபடிவங்கள் கிடைக்கப் பெற்றதன் நினைவாக இதற்கு இப்பெயரிடப் பட்டது.