TNPSC Thervupettagam

வகுப்புவாத அரசாணை 1921

September 21 , 2021 1068 days 851 0
  • இது 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் (செப்டம்பர் 16) நீதிக் கட்சி மாகாண அரசாங்கத்தால் வழங்கப் பட்டது.
  • அது இந்தியக் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் மற்றும் ஆதி-திராவிடர் ஆகியோரை உள்ளடக்கிய பிராமணரல்லாதோர் மாகாணச் சேவைகளில் வகிக்கும் பதவிகளின் விகிதத்தை அதிகரிக்க முயன்றது.
  • இது பிராமணரல்லாதவர்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு நிர்வாகம் மற்றும் அரசியலில் அவர்களுக்கு வேண்டிய இடத்தைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பி.ஆர். அம்பேத்கர் தலித்துகளுக்கான அரசியல் இட ஒதுக்கீட்டை 1919 ஆம் ஆண்டில் சவுத்பரோ குழுவிடம் (Southborough Committee) கோரினார்.
  • 1928 ஆம் ஆண்டில், சுப்பராயன் ஆட்சியின் கீழ் அப்போதையக் கல்வி அமைச்சராக இருந்த முத்தையா முதலியார் 1921 ஆம் ஆண்டின் ஆணையை அமல்படுத்த ஒரு வகுப்புவாத அரசாணையை அறிமுகப் படுத்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்